ஞாயிறு, 2 அக்டோபர், 2022

மலரும் நினைவுகள்! 20

 லவ்லி பாலகிருஷ்ணன்.

கூட்டத்தில் அனைவருக்கும் உணவு தடையின்றி வழங்கினார்கள். அய்யா அவர்களும் அனைவர்களுடனும் உணவருந்திய பின் தங்கியுள்ள அறைக்கு எங்களை அழைத்து சென்று செலவுக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டார். அந்த பகுதி வியாபாரிகள் செல்வந்தர்களிடம் வசூல் செய்ததும் ஓரளவுக்கு செலவுக்கான பணம் வசூலாகிவிட்டது என்று தெரிவித்தார்கள். மகிழ்ந்த அய்யா அவர்கள் எங்களை மிகவும் பாராட்டினார்.

அன்றிரவு விடைபெற்றபின் எந்தெந்த பகுதிக்கு என்று செல்வது என்பதை குறித்த்துக்கொண்டு அந்தந்த தேதிகளில் நான் அவசியம் வரவேண்டும் என்று சொன்னார்கள்.

அமைப்பாளர்களுடன் குறிப்பிட்ட தேதிகளில் அனைத்து பகுதிகளுக்கும் பயணம் செய்து உறுப்பினர் படிவம் வழங்கி 30 உறுப்பினர்கள் சேர்ந்ததும் அழைக்க சொன்னோம். முதலில் அம்மாப்பேட்டை, பட்டைக்கோயில், குகை, செவ்வாய்ப்பேட்டை மற்றும் பகுதிகளில் உறுப்பினர்கள் சேர்க்க ஆரம்பித்தனர். அடுத்த நிகழ்ச்சி செவ்வாய்ப்பேட்டையில் ஏற்பாடு ஆகியது. அதன் விபரம் அடுத்த நினைவுகளில்!

மலரும் நினைவுகள்! 21

 லவ்லி பாலகிருஷ்ணன்.

சேலம் செவ்வாய் பேட்டை கிளையில் நிர்வாகிகள் தேர்வு செய்து தலைமை சங்கத்தில் 26-9-1999 அன்று நிகழ்ச்சிக்கு ஒப்புதல் பெற்று செவ்வாய் பேட்டை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மண்டபம் புக்கிங் செய்து நோட்டீஸ் பிரிண்டிங் செய்ததும் பொதுச் செயலாளர் அய்யா திரு டீ வீ எஸ் மணி அவர்களின் வருகை மிக விமரிசையாக செய்ய நினைத்த செவ்வாய் பேட்டை நிர்வாகிகள் திருவாளர்கள் எஸ். தேவராஜ், P.செல்வராஜ்,  நாராயணசாமி, A.சந்திரன், P.சண்முகம் ஆகியோருடன் நானும்  ஜாகிர் அம்மாபாளையம் போன்று மாவட்டம் முழுவதும் சுற்றி அழைப்பு தந்தோம். 

நிகழ்ச்சி முதல்நாள் சென்னையியிலிந்து அய்யா அவர்கள் பேருந்து மூலம் சேலம் பேருந்து நிலையம் வருவதற்குள் உடைகள் செவ்வாய் பேட்டை கிளை உறுப்பினர்கள் அடையாள அட்டைகள் இருந்த சூட்கேஸ் திருடப்பட்டு விட்டது.

காலையில் நிகழ்ச்சிக்கு அய்யா அவர்கள் அணிந்து கொள்ள ஆடைகள் இல்லை என்று வருந்தும் போது தையற்கலைஞர்களால் எதுவும் முடியும் எனும் சம்பவம் நடந்தது. என்னை என்பது அடுத்த நினைவுகளில்!

புதன், 28 செப்டம்பர், 2022

மலரும் நினைவுகள்! 19

 லவ்லி பாலகிருஷ்ணன்.

காலை 9-00 மணிமுதல் சிறுக சிறுக அனைத்து பகுதிகளில் இருந்தும் தையற்கலைஞர்கள் வரத்தொடங்கி விட்டனர். அய்யா அவர்களும் காலை 10-00 மணிக்கெல்லாம் மேடைக்கு வந்து விட்டார்.

ஒவ்வொரு பகுதியில் வந்தவர்கள் பெயர் குறித்து கொண்டு யார் பேசுவார் என்பதையும் கேட்டு ஒவ்வொரு பகுதியாக பேச அழைத்தேன். பேசுவதற்கு முன்பாக அனைவரிடமும் சங்கம் தேவையா இல்லையா எப்படி அமைக்கலாம் என்பதை மட்டுமே பேச சொன்னேன். அனைவரின் பேச்சையும் பெயருடன் அய்யா அவர்கள் குறிப்பெடுத்தார். 500 பேருக்கும் மேல் வந்திருந்தனர். மகளிர் 200 பேருக்கு மேல் இருக்கும்.

அனைவரும் சங்கம் அவசியம் தேவை என்றுதான் பேசினார்கள். இறுதியில் அய்யா அவர்களின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டை மிகவும் பாராட்டினார். மாவட்டத்திற்கு 6 அமைப்பாளர்களை அய்யா அவர்கள் நியமனம் செய்தார். எனக்கு பதவி முக்கியமல்ல சங்கம் அமைத்தால் மகிழ்வேன் உழைப்பை தருவேன் என் பெயரை சேர்க்க வேண்டாம் என்று முன்கூட்டிய சொல்லி விட்டேன்.  அமைப்பாளர்கள் அனைவரும் விரைவில் மாவட்ட நிர்வாகம் அமைக்கவும் சொன்னார்.

அடுத்த நிகழ்வுகள் விரைவில்!

மலரும் நினைவுகள்! 18

 லவ்லி பாலகிருஷ்ணன்.

சேலத்தில் பொன்னம்மாபேட்டையில் பெரியவர் கொடி தைக்கிறார் என்றவுடன் அவரை சந்தித்து நமது கொடி என்றவுடன் ஆர்வமாக குறைந்த விலையில் சிம்பலுடன் கொடிகள் தயாரித்து தந்தார். ஜாகிர் அம்மாபாளையம் தையற்கலைஞர்களும் 6அடிக்கு 30அடி‌ அளவில் சில கொடிகள் தைத்தனர். மதியம் 300 பேருக்கு உணவு சொல்லி தேவைப்பட்டால் மேலும் உணவு தயாரிக்கவும் ஆயுத்தமானோம்.

முதல்நாள் இரவு மண்டபத்திற்கு அருகிலும் இரும்பாலை ரோட்டில் நடுவில் சென்டர் மீடியேட்டரில் விளக்கு கம்பங்களுக்கு இடையிடையே கொடிகள் கட்டினோம். நிகழ்ச்சியை மாநாடு போன்றே ஏற்பாடு செய்து விட்டனர்.

காலையில் அய்யா டீ வீ எஸ் மணி அவர்களும் மற்றும் நிர்வாகிகளும் நாமக்கல் மாவட்ட செயலாளர் திரு சாமுவேல் அவர்களும் வந்து பார்த்து வியந்து விட்டார்கள். 

நாங்கள் கூட்டம் எப்படி சேரும் என்ற சிந்தனையிலேயே இருந்தோம்.

கூட்டம் எப்படி நடந்தது என்பது மலரும் விரைவில்!

திங்கள், 26 செப்டம்பர், 2022

மலரும் நினைவுகள்! 17

 லவ்லி பாலகிருஷ்ணன்.

முக்கியஸ்தர்கள் அனைவரும் சேர்ந்து எப்படி நிகழ்ச்சி நடத்துவது என்னென்ன செலவுகள் உள்ளது என்று கணக்கு பார்த்தோம். அதை எப்படி வசூல் செய்வது என்று பார்த்தோம். அனைத்தையும் செய்து விடலாம் என்று எனக்கு நம்பிக்கை தந்தார்கள்.

20 தினங்கள் மட்டுமே உள்ளது. 

பேசியபடி நானும் திருவாளர்கள் ஏ.வி.முத்துவேலன், ஸ்டாண்டர்ட் ராஜமாணிக்கம், கிஷோர் ராஜமாணிக்கம், லோகநாதன், தமிழ், மாது, தங்கவேல், வி.விஜயகுமார் ஆகியோரும் 3 அல்லது 4 பைக்கில் அவரவர் பைக்கிற்கு அவரவர்கள் பெட்ரோல் போட்டு காலையில் கிளம்பி இரவு வரை சேலம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் 15 தினங்கள் நோட்டீஸ் விநியோகம் செய்து சங்கத்தின் தேவை குறித்து விளக்கி அழைத்தோம். இடையிடையே இரண்டு மூன்று நபர்கள் வசூலுக்கு சென்று விடுவார்கள். நாளூம் நெருங்க நெருங்க கூட்டம் வருமா என்று சந்தேகமும் வந்தது. ஆனாலும் நம்பிக்கையுடன் செயல்பட்டோம். அய்யா டீ வீ எஸ் மணி அவர்களும் இடையிடையே தொலைபேசி மூலம் விசாரித்தது தெம்பு கொடுத்தது.

நாளும் நெருங்கியது நிகழ்வுகள் தொடரும்!

மலரும் நினைவுகள்! 16

 லவ்லி பாலகிருஷ்ணன்.

மதுரை மாநில மாநாட்டிற்கு பின்னர் 2நாளில் சேலம் சென்று ஜாகிர் அம்மாபாளையம் நிர்வாகிகளை சந்தித்தேன். ஸ்டாண்டர்ட் திரு ராஜமாணிக்கம் அவர்கள் இல்லத்தில் கூட்டம் நடைபெற்றது. இந்த வாரத்தில் 50 உறுப்பினர் சேர்க்கிறோம் என்றார்கள் சென்னையில் இருந்து உறுப்பினர் அட்டைகள் வந்ததும் அய்யா டீ வீ எஸ் மணி அவர்களிடம் தேதி வாங்கி மண்டபத்தில் மாவட்ட அளவில் கூட்டம் நடத்துவது என்றார்கள்.

5தினத்தில் 50 உறுப்பினர் சேர்த்தனர். நான் வாங்கிக்கொண்டு நேரில் சென்று பொதுச்செயலாளர் அவர்களை சந்தித்து கார்டு தயார் செய்து தேதியும் வாங்கி சேலம் திரும்பினேன். அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி.

ஜாகிர் அம்மாபாளையம் இரும்பாலை ரோடு வேலாயுத கவுண்டர் திருமண மண்டபம் புக்கிங் செய்து மாவட்ட ஆலோசனை கூட்டம் நோட்டீஸ் பிரிண்டிங் செய்து முக்கியஸ்தர்களுடன் சென்னை நேரில் சென்று அய்யா டீ வீ எஸ் மணி அவர்களுக்கு அழைப்பு தந்து சேலம் வந்ததும் நிகழ்ச்சி திட்டம் தீட்டினோம்.

திட்டம் மலரும்!

மலரும் நினைவுகள்! 15

 லவ்லி பாலகிருஷ்ணன்.

பொதுக்குழுவில் அய்யா டீ வீ எஸ் மணி அவர்கள் பேசும் போது சேலத்தில் இருந்து மூன்று கிளைகள் வந்ததற்கு நன்றி என்றும் லவ்லி பாலகிருஷ்ணன் அவர்களை பாராட்டுவதாகவும் சொல்லி சேலத்தில் கிளைகள் அமைக்க வேண்டும் என்று மனு தந்துள்ளார்கள் சேலம் மாவட்டம் அமைக்கும் பொறுப்பு லவ்லி பாலகிருஷ்ணன் வசம் தந்துள்ளேன். அவர் மூலம் உறுப்பினர் அட்டைகள்பெற்று கிளைகள் அமைத்து மாவட்ட சங்கம் அமைக்க வேண்டும் என்று கூறினார்.

அதன் பின்னர் மாலை 4-00 மணிக்கு தெப்பக்குளம் அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு மேலமாசி வீதி வடக்குமாசிவீதி ஆலாலவிநாயகர் கோயில் அருகில் அமைக்கப்பட்ட மாநாட்டு பந்தலை அடைந்தது. 

அரசியல் கட்சிகள் கூட்டத்தை விட நமது கூட்டம் அதிகமாக இருந்தது குறிப்பிடத தக்கது.

மாநாடு முடிந்ததும் இரண்டு தினத்தில் சேலம் வருவதாக சொல்லி அனுப்பி இத்தகவலை பொதுச் செயலாளர் அவர்களிடமும் தெரிவித்தேன்.

சேலத்தில் நடந்த நினைவுகள் தொடரும்!

செவ்வாய், 20 செப்டம்பர், 2022

நலவாரியத்தில் இணைவோம் பயண்கள் பெறுவோம்

 அன்பு தையற்கலைஞர்களே வணக்கம் நமது சங்கத்தின் நிறுவனர் அய்யா டீ வீ எஸ் மணி அவர்களின் அயராத உழைப்பால் அவரது அன்பு கட்டளைக்கு உட்பட்டு அனைத்து நிகழ்ச்சிகள் மாநாடுகளில் கலந்து கொண்டு நமது பலத்தை காண்பித்து 2000 ஆம் ஆண்டு நலவாரியம் பெற்றோம். 

இப்போது பலர் பயண்கள் பெற்று வருகின்றனர். நமது திருப்பத்தூர் மாவட்ட தலைவர் திரு எஸ். நீஜீர் அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைத்துள்ளது. இதுபோல் பலர் பயண் பெறுகின்றனர். அய்யா டீ வீ எஸ் மணி அவர்களின் கனவு நனவாகின்றது. 

இது மேலும் நீடிக்கவும் மேலும் அதிக பயண்கள் பெறவும் தனி நலவாரியம் தான் தேவை. அதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தையற்கலைஞர்களும் புரோக்கர் சங்கங்கள் கட்சி தொழிற்சங்கம் மூலம் இணையாமல் நமக்கென செயல்படும் நமது தொழிற்சங்கம் தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் TTKTMS பதிவு எண் 2682/CNI மூலம் மட்டுமே இணைவதன் மூலம் நமக்கு அதிக பலம் கிடைக்கும் நாமும் நமக்கு தனிநலவாரியம் கேட்கலாம். இனி அனைவரும் இந்த முயற்சியில் பாடுபடுவோம் அய்யா டீ வீ எஸ் மணி அவர்களின் கனவை முழுவதும் நிறைவேற்றுவோம்!

அன்புடன்

லவ்லி பாலகிருஷ்ணன்.

மலரும் நினைவுகள்! 14

 லவ்லி பாலகிருஷ்ணன்.

அதன் பிறகு மறுநாள் அம்மாப்பேட்டை பகுதியில் திருவாளர்கள் அண்ணாமலை, முத்து, துரை, சாமி மற்றும் தையற்கலைஞர்களையும் பட்டைக்கோயில் பகுதியில் வி.எஸ். ரவி, முனுசாமி, தியாகராஜன், மோகன், ஜோதி, சுப்ரமணி, வரதராஜன், இஸ்லாமிய டெய்லர் பெயர் நினைவுக்கு வரவில்லை மற்றும் தையற்கலைஞர்களை சந்தித்து பேசினேன் அவர்களும் மாநில சங்கத்துடன் இணைத்து கிளைகள் அமைத்து தரவேண்டும் என்று கூறினார்கள். 

நான் உறுதி அளித்ததும் இரண்டு பகுதிகளும் ஒரு வேன் ஏற்பாடு செய்துவிட்டனர்.

மதுரை மாநில மாநாட்டிற்கு இரண்டு வேன்களில் மூன்று பகுதிகளிலிருந்து வந்தார்கள்.

அன்று காலையில் கணேஷ் தியேட்டர் அருகில் மண்டபத்தில் மாநில பொதுக்குழு சேலத்தில் இருந்து வந்தவர்கள் மேடையில் பொதுச் செயலாளர் திரு டீ வீ எஸ் மணி அவர்களிடம் மனு ஒன்றை கொடுத்தார்கள். சேலத்தில் இருந்து மூன்று கிளைகள் வந்ததை கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

தனது உரையின் போது மனு படித்து பதில் சொல்வதாக அறிவித்தார்.

என்ன எனும் விபரம் அடுத்த நினைவுகளில்!

மலரும் நினைவுகள்! 13

 மாநாட்டிற்கு நோட்டீஸ் விநியோகம் செய்ததில் ஜாகிர் அம்மாபாளையம் ஸ்டாண்டர்ட் ராஜமாணிக்கம் அவர்கள் எங்கள் பகுதியில் இருந்து மாநாட்டிற்கு வருகிறோம். தலைமை சங்கத்தின் உறுப்பினர் அட்டைகள் வாங்கி தந்து எங்களுக்கு கிளை அமைத்து தரவேண்டும் என்று கூறினார்.

மாநாட்டிற்கு பின் அவசியம் ஏற்பாடு செய்கிறேன். மாவட்ட நிர்வாகம் அமைக்க வேண்டும் என்றும் சொன்னேன். 

உடனே திருவாளர்கள் A.V.முத்துவேலன், பொன்னுச்சாமி, மாது, தங்கவேல்,V.விஜயகுமார்,,கிஷோர் ராஜமாணிக்கம், தமிழ், லோகனாதன் ஆகியோரை திரு ஸ்டான்டர்ட் ராஜமாணிக்கம் அவர்கள் அழைத்து வந்தார்.

அனைவரிடமும் கிளை அமைக்கவும் உறுப்பினர் அட்டைகள் பெற்று தரவும் உறுதி அளித்ததுடன் திரு டீ வீ எஸ் மணி அவர்களிடம் ஃபோன் மூலம் பேச வைத்தேன். அனைவரையும் அய்யா அவர்கள் மாநாட்டிற்கு அழைத்தார்.

உற்சாகமான அனைவரும் 20 உறுப்பினர்களுடன் வேன் மூலம் மதுரை மாநாட்டிற்கு தயாரானார்கள். அடுத்து பட்டைகோயில் அம்மாப்பேட்டை பகுதியின் தகவல்கள் மலரும்!

மலரும் நினைவுகள்! 12

 லவ்லி பாலகிருஷ்ணன்.

சேலம் 2 கூட்டங்களிலும் சரியான முடிவெடுக்காததால் 97 பிப்ரவரி மாதம் 27 மதுரையில் மாநில மாநாடு என்று மாநில சங்கத்தில் முடிவானது. என்னை அழைத்த அய்யா டீ வீ எஸ் மணி அவர்கள் சேலம் மாவட்டம் முழுவதும் சுற்றி மதுரை மாநாடு தகவல் தர வேண்டும் முடிந்தவரை அழைத்து வாருங்கள். மாநாட்டிற்கு பின் மற்ற விஷயங்கள் பேசலாம் என்று கூறினார். நான் லீனா லேபிள்ஸ் சார்பில் 3000 நோட்டீஸ் பிரிண்டிங் செய்து சேலத்தில் எனக்கு ராஜ்தூத் பைக் இருந்தது. காலை முதல் இரவு வரை சேலத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து டெய்லர் கடைகளிலும் விநியோகம் செய்து மாநாட்டிற்கு வர வேண்டும் என்று அழைத்தேன். பலர் ஆர்வமாக சங்கம் தேவை என்பதை கூறி விளக்கமாக கேட்டு தெரிந்து கொண்டார்கள். 

15 தினங்கள் 23 ந்தேதி வரை விநியோகம் செய்தேன்.

அன்றும் சில உணர்வற்ற வர்கள் டீ வீ எஸ் மணி பைக் வாங்கி தந்துள்ளார் சிலவுக்கு பணமும் தருகிறார் என்றெல்லாம் பின்னால் பேசினார்கள். அய்யா அவர்கள் சொல்படி நான் எதைப்பற்றியும் கண்டு கொள்ளாமல் மாநாட்டு வேலையில் மட்டுமே கவணம் செலுத்தினேன். 

அதற்குண்டான பலன் கிடைத்தது பற்றி அடுத்த நினைவுகளில் தொடரும்!

மலரும் நினைவுகள்! 11

 அய்யா டீ வீ எஸ் மணி அவர்கள் எந்த நிகழ்ச்சிக்கும் போக்குவரத்து செலவு ரூம் வாடகை தந்தால்தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று ஒரு குரூப்பில் ஒரு அன்பர் பதிவிட்டிருந்தார். எனக்கு தெரிந்து அப்படி பணம் வாங்காமல் தான் வந்துள்ளார்.

அன்றிருந்த உதவியாளர்கள் ஒரே நாளில் இரண்டு இடத்தில் தேதி கொடுத்து அதனால் சில இடங்களில் வர முடியாமல் போனதும் உண்டு.

மதுரை சூப்பர் டெய்லர் திருமண மண்டபம் காலையில் திறப்பு விழா மதியம் தஞ்சாவூர் இளங்கோவன் இல்ல திருமணம். இரவு சென்னை மூலக்கரை பத்மநாபன் திருமண வரவேற்பு. உதவியாளர்கள் மூன்று இடங்களிலும் தேதி கொடுத்து அவர்கள் துணைக்கு வரவில்லை நான் துணைக்கு சென்றேன். எவ்வளவு சிரமம் ஆகியிருக்கும் யாரிடமும் போக்கு வரத்து பணம் வாங்காமல் தண்ணீர் பாட்டில் பிஸ்கட் பாக்கெட் மட்டுமே. சரியாக உணவு அருந்தவும் நேரமில்லை. சென்னையில மூலக்கடை பத்மநாபன் திருமண வரவேற்பில் கலந்து கொள்ளும்போது இரவு 10-30 மணி.

அதேபோல் கொரடாச்சேரி காளிதாஸ் தம்பி கண்ணதாசன் திருமணம் காலையில் அதே நாள் காலையில் தர்மபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் தேதி கொடுக்கப்பட்டது. முதல்நாள் தான் உதவியாளர்கள் சொல்லியுள்ளார்கள். அய்யா அவர்கள் என்னை திருமணத்திற்கு வரவேண்டாம் தர்மபுரி செல்லுங்கள் பொதுக்குழு மாலையில் மாற்றுங்கள் என்று சொன்னார். நானும் நிர்வாகிகளை நேரில் சந்தித்து மாற்றம் செய்து அய்யா திருவாரூர் கொரடாச்சேரி திருமணம் முடிந்து உணவருந்தாமல் 4 பேருந்துகள் மாறி தர்மபுரி வரும் சமயம் மாலை 7-00 மணி சாப்பிடச் சொல்லியும் சாப்பிடாமல் மீட்டிங் முடிந்து தான் சாப்பிட்டார். எவ்வளவு கஷ்டம் நினைத்து பாருங்கள். யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. அதேபோல் திரு சாந்தம் அவர்களின் விஷயத்திலும் நடந்திருக்கும். சாந்தம் அவர்களைப் பற்றி உலக தையற்கலைஞன் மாத இதழில் பலமுறை பெருமை பட்டுள்ளார்.

மலரும் நினைவுகள்! 10

 லவ்லி பாலகிருஷ்ணன்.

சேலத்தில் நிர்வாகிகளை சந்தித்த அய்யா டீ வீ எஸ் மணி தலைமை சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் தலைமை சங்கத்தில் இணைவதால் உள்ள நன்மைகள் எடுத்து கூறினார்.

விரைவில் ஒரு கூட்டம் கூட்டுவதாகவும் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் முடிவெடுத்தார்கள்.

அதன்படி இரண்டு கூட்டங்களில் அய்யா டீ வீ எஸ் மணி கலந்து கொண்டார். 96 ஜனவரி மாதம் 27ந் தேதி சேலத்தில் முடிவு எடுத்து சூழ்நிலை காரணமாக நடத்த முடியாமல் 1996 ஜுன் 27ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சிறப்பான மாநில மாநாடு நடந்தது. சேலத்தில் இருந்தும் கலந்து கொண்டனர்.

அடுத்த சேலம் சம்பவத்தின் நினைவுகள் அடுத்து!

மலரும் நினைவுகள்! 9

 லவ்லி பாலகிருஷ்ணன்

தருமபுரி என்றவுடன் நினைவுக்கு வரும் சம்பவம் திரு ஜி.என். ராவ், அவர்களும் திரு டீ வீ எஸ் மணி அவர்களும் 92ல் சங்கம் ஆரம்பிக்கவும் 93ல் மாநில மாநாடு நடத்த முடிவெடுத்ததும் தர்மபுரி மாவட்டம் இண்டூர் திரு சாந்தம் அவர்கள் அழைப்பின் பேரில் இண்டூர் சென்றனர். அந்த காலத்தில் பாத்ரூம் வசதிகள் கிடையாது. கண்மாய்கரை தான். காலையில் குளிப்பதற்கு கோயிலில் கற்களை வைத்து அடுப்பில் சுடுதண்ணீர் வைத்து குளிக்க செய்தனர்.

சங்கம் புதிது சென்னையில் இருந்து நிர்வாகிகள் வந்தது தெரிந்த தையற்கலைஞர்கள் மகிழ்ச்சியுடன் திரளாக கூடினார்கள்.

மக்களின் எழுச்சி பார்த்த திரு ஜி.என். ராவ்,டீ வீ எஸ் மணி ஆகியோர் உற்சாகத்துடன் சென்னை வந்து சங்கத்தை வளர்க்க அடுத்த முயற்சியில் இறங்கினார்கள்.

சங்கம் இந்த அளவுக்கு வளர இண்டூர் கிளையும் திரு சாந்தம் அவர்களும் தான் காரணம்!

மலரும் நினைவுகள்! 8

 லவ்லி பாலகிருஷ்ணன்.

மதுரையில் நடைபெற்ற மாநில மாநாட்டிற்கு பின் அங்கங்கே சில கிளைகளிலும் மாவட்டங்களிலும் கூட்டங்கள் நடைபெற்றன.

நான் சில கூட்டங்களில் பார்வையாளராக கலந்து கொண்டேன்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகரில் மாவட்ட அளவில் மாநாடு மற்றும் ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. திரு ஜி.என். ராவ் அவர்களும் அய்யா டீ வீ எஸ் மணி அவர்களும் கலந்து கொண்டார்கள். நகர சங்கத்தின் அழைப்பின் பேரில் நானும் கலந்து கொண்டேன். மாநாடு மிக சிறப்பாக இருந்தது. மேடையில் திரு ஜி.என். ராவ், திரு டீ வீ எஸ் மணி ஆகியோர் பேச்சு வந்திருந்த அனைவரையும் கவர்ந்தது. 88க்குப்பின் சங்கத்தின் செயல்பாடுகள் குறைந்தன.89 அல்லது 90ல் திருச்சி சுப்ரமணியபுரம் பகுதி சங்கம் திரு கணேசன் அவர்கள் தலைமையில் சர்ச் அருகில் பள்ளிக்கூட வளாகத்தில் கூட்டம் நடைபெற்றது. பார்வையாளராக கலந்து கொண்டேன.

அதன் பின்னர் 93 சென்னையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் கலந்து கொள்ள இயலவில்லை. 94ல் உரத்த சிந்தனை கூட்டத்தில் அய்யா அவர்களை சந்தித்து பின்னர் தர்மபுரி மகளிர் மாநாட்டிற்கு பின் சேலம் வந்தார் அய்யா டீ வீ எஸ் மணி. அங்கு நகர சங்கம், மாவட்ட சங்கம் என்று இரண்டு சங்கங்கள் இருந்தன.

தலைமை சங்கத்தில் இணையாமல் தனியாக இருந்தன. ஆகவே நிர்வாகிகளை சந்தித்து பேச 94ம் ஆண்டு கடைசியில் சேலம் வந்தார். எனக்கு தகவல் தந்தார். மற்ற தகவல்கள் நினைவுகளாக மலரும்!

மலரும் நினைவுகள்! 7

 லவ்லி பாலகிருஷ்ணன்

நான் நமது சங்கத்தின் தலைவர் திரு சுதாகரன் அவர்களை சந்தித்து விபரம் கூறினேன். விபரம் அனைத்தும் கேட்டு அவரது உதவியாளரை அழைத்து சங்கத்தின் லெட்டர் பேடு கொடுத்து தம்பி பாலகிருஷ்ணன் சொல்வது போல் டைப் செய்து வருமாறு கூறினார்.

நானும் உடன் சென்று வங்கி மேலாளர் சொன்னது போல டைப்பிங் செய்து தலைவர் அவர்களிடம் தந்ததும் கையெழுத்து போட்டு கவரில் வைத்து தருமாறு உதவியாளரிடம் தரும் சமயம் ஒரு நிர்வாகி வந்தார். கடிதத்தை படித்து பார்த்து எப்படி சங்கத்தின் லெட்டர் பேடில் தரலாம் என கேட்டார். தம்பியை எனக்கு பல ஆண்டுகளாக நன்றாக தெரியும் நான் தலைவர் நான் தருகிறேன். எனது பொறுப்பு என்று கூறி என்னிடம் கடிதம் தந்தார்.

வங்கியில் கடிதம் தந்ததும் மேலாளர் லோன் சாங்ஷன் செய்தார்.

திரு சுதாகரன் அவர்களும் திரு டீ வீ எஸ் மணி அவர்களும் என்னிடம் காட்டிய பாசம் தான் எனக்கு சங்கத்தில் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

1981 என்று நினைக்கிறேன் தமிழ்நாடு முழுவதும் சங்கங்கள் இணைத்து தலைவர் திரு சுதாகரன் அவர்கள் தலைமையில் மதுரையில் மாநில மாநாடு நடந்தது. நானும் மாநாடு நோட்டீஸ் பல கடைகளில் தந்து தகவல் சொன்னேன்.

லீனா லேபிள்ஸ் சார்பில் கல்கண்டு புத்தகம் அளவில் 16 பக்கத்தில் தையற்கலைஞர்களின் கருத்து வாழ்த்துக்களுடன் 2000 பிரதிகள் அச்சிட்டு மாநாட்டில் விநியோகம் செய்தோம்!

நினைவுகள் தொடரும்!

மலரும் நினைவுகள்! 6

 லவ்லி பாலகிருஷ்ணன்

70லிருந்து தொழிலை மும்முரமாக கவணித்தேன். 76ல் சகோதரர்கள் திரு சாகேத்தராமன் மற்றும் திரு கிரிதரன் ஆகியோரும் படிப்பை முடித்து தொழிலுக்கு வந்து விட்டனர்.

76 ல் லேபிள் தொழிலுடன் வீட்டில் 10 எம்ப்ராய்டரி மிஷினும் 3 ஜிக் ஜாக் மிஷினும் வாங்கி வெளியில் கூலி வேலை வாங்கி தொழிலாளர்கள் ஒத்துழைப்புடன் இரவு பகல் வேலை நடந்து கொண்டிருந்தது.

அப்போதெல்லாம் பழைய சிங்கர், பஃப் மிஷின் கள் தான் ஜிக் ஜாக் மிஷின்.

97ல் தான் ரெனியுவ் எனும் கம்பெனி இந்தியாவிலேயே ஜிக் ஜாக் மிஷின் தயார் செய்து வெளியிட்டது. உஷா டீலர் தான் அதன் விற்பனையாளர். நல்ல அறிமுகம் இருந்ததால் என்னை அழைத்து அவசியம் ஒரு மிஷின் வாங்க வேண்டும் என்றார்.

முதன் முதலில் மதுரையில் ரெனியுவ் ஜிக் ஜாக் மிஷின் வாங்கினோம். 

80ஆம் ஆண்டுகளில் எம்பிராய்டரி தொழில் டல் அடித்தது போட்டியும் அதிகமானது. 

நாங்கள் சகோதரர்கள் மதுரையில் லேபிள் கம்பெனி ஆரம்பிக்கலாமா என்று யோசித்தோம். பிரிண்டிங் தொழிலிலும் அனுபவம் இருந்ததால் மதுரை வீட்டில் பிரிண்டிங் பிரஸ்ஸும். மங்களக்குடி கிராமத்தில் உள்ள வீட்டில் லேபிள் கம்பெனி ஆரம்பிப்பது என்று முடிவு செய்து பணம் பற்றாக்குறைக்கு வங்கியில் சென்று விசாரித்தோம் மேனேஜர் வரிசைப்படி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும் என்றார். மதுரைக்கு புது தொழில் என்றவுடன் தொழில் சம்பந்தமான பெரிய நபரிடம் சுபாரிசு கடிதம் வாங்கி வரச் சொன்னார்.

நான் திரு சுதாகரன் அவர்களை சந்தித்து பேசிய விபரம் அடுத்த மலரும் நினைவுகளில்!

மலரும் நினைவுகள்! 5

 லவ்லி பாலகிருஷ்ணன்

1985 என்று நினைக்கிறேன் புதுக்கோட்டை மாவட்ட சங்கத்தின் தேர்தலுக்கு தேர்தல் அதிகாரிகளாக திரு ஜீ.என். ராவ் அவர்களும் அய்யா டீ வீ எஸ் மணி அவர்களும் வந்திருந்தார்கள் என்னை பார்வையாளராக அழைத்திருந்தனர். நாங்கள் சந்தித்து கொண்டோம் அறிமுகம் செய்து பேசும் அளவுக்கு நேரம் கிடைக்கவில்லை. 

சென்னையில் சந்திக்கும் போது அந்த சந்திப்பை நினைவு படுத்தினேன். அவருக்கும் நினைவிருந்தது.

சங்கத்தை பற்றி பேசினோம். சங்கத்தில் பதவியில் இல்லாவிட்டாலும் திரு சுதாகரன் அவர்கள் தகவல் பேரில் செல்லும் கடைகளில் சங்கத்தின் கூட்டம் பற்றிய தகவல்கள் சொல்வேன். இந்த விஷயத்தை அய்யா டீ வீ எஸ் மணி அவர்களிடம் பலர் சொல்லி இருந்துள்ளனர். என்னை பாராட்டி சங்கத்தின் வளர்ச்சிக்கு உங்கள் பங்கு வேண்டும் என்றார். 

நான் இதுவரை ( 1994 வரை ) எனது தொழிலின் வளர்ச்சிக்காக யோசித்தேன் தற்போது ஆண்டவன் புண்ணியத்தாலும் தையற்கலைஞர்கள் ஆதரவிலும் நன்றாக வளர்ந்துள்ளேன். சங்கத்திற்கு என்ன செய்ய வேண்டும் கிளை இல்லாத இடத்தில் கிளை அமைக்கவும் மாவட்ட சங்கம் இல்லாத மாவட்டத்தில் மாவட்ட சங்கம் அமைக்கவும் பாடுபடுவேன் என்று கூறினேன். தாங்களும் எனக்கு எங்கு என்ன வேலை என்று தகவல் தாருங்கள் என்று கூறினேன். 1995ல் சேலம் மாவட்டத்தில் அய்யா அவர்களும் நானும் இணைந்து செயல்பட்டது அடுத்த மலரும் நினைவுகளில் அதற்கு முன் திரு சுதாகரன் அவர்களின் தொடர்பில் பற்றிய தகவல்கள்!

மலரும் நினைவுகள்! 4

லவ்லி பாலகிருஷ்ணன்
70ல் இருந்து 96 வரை லேபிள் தொழிலுடன் பத்திரிகைகளுக்கு துணுக்கு எழுதும் பணியும் துணுக்கு எழுத்தாளர்கள் சங்கத்தில் துணை தலைவர் பதவியிலும் இருந்தேன்.
ஓ! பல்சுவை மாத இதழ் நண்பர்களுடன் ஆரம்பித்து அதில் துணை ஆசிரியராகவும் இருந்தேன்.
பத்திரிகை எங்கள் லவ்லி பிரிண்டர்ஸ்ல் அச்சாகி வெளி வந்தது. உலக தையற்கலைஞன் மாத இதழும் கிட்டத்தட்ட ஒரே சமயம் வெளியானது. உரத்த சிந்தனை அமைப்பின் மூலம் துணுக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு திசை முத்து அவர்களுக்கு 1994ல் விருது வழங்கும் விழாவுக்கு சென்றிருந்தேன். அங்கு அய்யா டீ வீ எஸ் மணி அவர்களும் வந்திருந்தார். அனைவருக்கும் அந்த மாதத்தின் பத்திரிகை கொடுத்தார். நான் அய்யா அவர்களிடம் ஓ! மாத இதழ் லவ்லி பாலகிருஷ்ணன் என்று அறிமுகப்படுத்தி கொண்டேன். உடனே லீனா லேபிள்ஸ் தானே என்று புன்னகையுடன் கேட்டார். அதன்பின் நாளை என்னை வந்து சந்திக்க முடியுமா? நிறைய பேச வேண்டும் என்றார். அதேபோல் மறுதினம் மயிலாப்பூர் கடையில் சந்தித்தேன்.
விபரம் தொடரும்.
70க்கு பின் திரு சுதாகரன் அவர்களின் தொடர்பும் மலரும் நினைவுகளாக தொடரும்!

மலரும் நினைவுகள்! 3

 லவ்லி பாலகிருஷ்ணன்.

எனக்கு தெரிந்த பைண்டிங் கம்பெனியில் நானே அருகில் இருந்து அட்டைப்பெட்டிகள் தயார் செய்து டெலிவரி செய்தேன். அட்டை பெட்டிகளை பார்த்த திரு சுதாகரன் அவர்கள் கோட் தயாரிக்கும் மற்ற கடைகளுக்கும் ஃபோன் செய்து அட்டைப்பெட்டிகள் சிறப்பாக உள்ளது ஆர்டர் தாருங்கள் என்று சொல்லி என்னை அந்த கடைகளுக்கும் அனுப்பி வைத்தார். அவர்களும் அட்டைபெட்டிகளை பார்த்து ஆர்டர் தந்தார்கள்.

1970ல் எனக்கு முழுநேர பணியாக மாறிவிட்டது. 

அதற்குள் மெட்டீரியல் கடைகாரர்களும் என்னைப் போன்றே பட்டன்கள் வரவழைத்து விற்பனை செய்ய ஆரம்பித்ததால் லேபிள் தொழிலை முழுநேர பணியாக மாற்றியதுடன் அருகில் உள்ள ஊர்களிலும் ஆர்டர் எடுக்க ஆரம்பித்தேன்.

எனது நினைவுகள் தொடரும்........

மலரும் நினைவுகள்! 2

 லவ்லி பாலகிருஷ்ணன்

 இப்படியே எனது வாழ்க்கையில் மாற்றங்கள் நடைபெற ஆரம்பித்தது. திரு சுதாகரன் அவர்கள் 1970ல் மிகவும் நன்றாக பழக ஆரம்பித்தார். அது சமயம் லேபிள் ஆர்டரும் வாங்க ஆரம்பித்து இருந்தேன். திரு சுதாகரன் அவர்கள் கோட் வைத்து தரும் அட்டை பெட்டி காண்பித்து அதில் அவருக்கு தோன்றும் குறைகளை சொல்லி அவைகளை நிவர்த்தி செய்து தயார் செய்ய முடியுமா என்று கேட்டார். நான் ஒரு அட்டைபெட்டியை வாங்கிக்கொண்டு கீழ ஆவணி மூல வீதி பேப்பர் ஸ்டோர் பஜாரில் வேண்டிய திக் அட்டைகளும் கலிகோ மார்பிள் பேப்பர் வாங்கி வந்து விடுமுறை தினத்தில் எனது சகோதரரின் ஆலோசனையுடன் புதிய முறையில் சரியான மூடி அளவிலும் வளையாத வகையிலும் தயார் செய்து மறுநாள் திரு சுதாகரன் அவர்களிடம் காண்பித்தேன். பார்த்ததும் மகிழ்ந்து நன்றி தெரிவித்து 100 பெட்டிகள் ஆர்டர் தந்தார். என்னால் தயார் செய்ய சரியான இயந்திரங்கள் இல்லை ஆகவே எனக்கு தெரிந்த பைண்டிங் கம்பெனியில் மெட்டீரியல் வாங்கி தந்து இதே முறையில் தயார் செய்து தருகிறேன். சிறுசிறு குறைகள் முதலில் வந்தாலும் நாளடைவில் இதைவிட நல்ல ஃபினிஷிங்கில் செய்து தருகிறேன் என்று கூறியவுடன் மகிழ்ந்து ஆர்டர் தந்தார்.

மேலும் நினைவுகள் தொடரும்!

மலரும் நினைவுகள்! 1

 லவ்லி பாலகிருஷ்ணன்

அன்பு தையற்கலைஞர்களே வணக்கம் நீண்ட நாட்களாக எனது பயணத்தின் சுவடுகளை முடிந்த வரையில் நினைவு படுத்தி தரலாம் என்று நினைத்து இன்று ஆரம்பிக்கின்றேன்.

எனக்கு தொழிலும் சங்கமும் வாழ்க்கையில் இணைந்தே நடைபெற்றதால் எனது தொழிலில் இருந்து ஆரம்பிக்கின்றேன்.

1964ல் ஹைஸ்கூல் படிக்கும் போது எனது அண்ணன் திரு சௌந்தர்ராஜன் அவர்கள் ஒரு ரெடிமேட் தயாரிப்பு மற்றும் எம்பிராய்டரி கம்பெனியில் மேலாளராக இருந்தார்.

பள்ளிக்கூடம் முடிந்ததும் மாலையிலும் இரவிலும் விடுமுறை நாட்களிலும் அங்கு எம்பிராய்டரி பிசின் கட்டிங் செய்வது தொழிலாளர்களுக்கு மெட்டீரியல் எடுத்து தருவது போன்ற வேலை செய்வேன்.

அப்போது குழந்தைகளுக்கு கவுன் பாபாசூட் தயாரிப்பு கம்பெனிகளில் டிசைன் பட்டன்கள் அதிக அளவில் கிடைக்காது எனது சகோதரர் பெங்களூர் மற்றும் பாம்பேயில் இருந்து அதிக டிசைன்களில் பட்டன்கள் வரவழைத்தார் கோட் பட்டன்களும் வரவழைத்தார். 

ரெடிமேட் தயாரிப்பாளர்களுக்கு பல டிசைன்களில் பட்டன் பார்த்ததும் மகிழ்ந்து அதிக அளவில் வாங்கினார்கள்.

மதுரையில் கோட் தைப்பவர்கள் சுதாகரன் டெய்லர்ஸ், பாப்னி டெய்லர்ஸ், வேல்முருகன் டெய்லர்ஸ், பாம்பே டெய்லர்ஸ் ஆகியோர் மட்டுமே.

கோட் பட்டன் பல மாடல்கள், கலர்களில் சப்ளை செய்ததின் மூலம் நமது தையற் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் திரு சுதாகரன் அவர்கள் அறிமுகம் கிடைத்தது நான் சங்கத்தில் சேவை செய்ய ஊன்று கோலாக அமைந்தது.

தொடர்ச்சி அடுத்து......

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

TTKTMS திருவொற்றியூர் கிளை சங்க துணை செயலாளர் திரு.V.K.மகேஷ் அவர்கள் மகனின் திருமண விழாவில் திருவொற்றியூர் கிளை சங்கம்


 தமிழ் நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்TTKTMS பதிவு எண் 2682/CNI

திருவொற்றியூர் கிளை சங்க துணை செயலாளர் திரு.V.K.மகேஷ்

அவர்கள் மகனின் திருமண விழாவில் திருவொற்றியூர் கிளை சங்க தலைவர் 

திரு M.S.பாண்டியன் செயலாளர் 

திரு K.துரைசாமி பொருளாளர் 

திரு M.சசி குமார்

 வட சென்னை மாவட்ட செயலாளர்

 திரு G.முத்துகுமார் 

துணை செயலாளர் திரு T.V.வெங்கட் ராம்ஜி

 அவர்கள் மற்றும் 

கிளை சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி ஆசி வழங்கினார்கள் 

திருமண பந்தத்தில் இணையும் தம்பதிகளுக்கு நல் வாழ்த்துக்கள்  

என்றும் அன்புடன் 

திருவொற்றியூர் கிளை சங்கம்                                                                                          ஒற்றுமையை உணர்த்தும் திருவெற்றியூர் கிளை சங்கம்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    இன்று சென்னை திருவெற்றியூர் கிளை சங்கத்தின் துணை செயலாளர் திரு V.K. மகேஷ் அவர்களின் மகன் திருமணம் நடைபெறுகிறது. கிளைச் சங்க நிர்வாகிகள் அனைவரும் தங்கள் இல்ல திருமணமாக நினைத்து உழைத்து கொண்டுள்ளார்கள். மிகவும் மகிழ்ச்சி.

இதுதான் அய்யா டீ வீ எஸ் மணி அவர்களின் கனவு.

ஒற்றுமையின் பலனையும் அய்யா அவர்களின் கனவை செயலாற்றும் திருவெற்றியூர் கிளை நிர்வாகிகள் அனைவருக்கும் மிக்க நன்றி!

தமிழகம் முழுவதும் இதேபோல் அனைத்து ஊர்களிலும் நமது சங்கத்தின் செயலை மக்களுக்கு உணர்த்த வேண்டும்!

லவ்லி பாலகிருஷ்ணன்.   





சனி, 3 செப்டம்பர், 2022

TTKTMS தையற்கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் TVT CHENNAI 19

 TTKTMS தையற்கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் திருவொற்றியூர் கிளை சங்கம் உறுப்பினர் திரு சக்கரபாணி அவர்கள் மகள் திருமண நிகழ்ச்சியில் திருவொற்றியூர் கிளை சங்கம் தலைவர் திரு.M.S.பாண்டியண் செயலாளர் திரு K.துரைசாமி பொருளாளர் திரு M.சசி குமார் மற்றும் துணை செயலாளர் திரு T.V.வெங்கட்ராம்ஜி மற்றும் நமது சங்க நிர்வாகிகள் மண மக்களை வாழ்த்தி ஆசி வழங்கினார் என்றும் அன்புடன் TTKTMS தையற்கலை தொழிலாளர் சங்கம்



திங்கள், 15 ஆகஸ்ட், 2022

TTKTMS TAMIL NADU

 
















 இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

அனைத்து தையற்கலை தொழிலாளர்களுக்கும், அய்யா டீ வீ எஸ் மணி அவர்களின் வழியில் தையற்கலை தொழிலாளர்களுக்காக உழைத்திடும் கிளை, மாவட்டம், மாநில நிர்வாகிகளுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

வருகின்ற 2023 சுதந்திர தினத்திற்குள் தனி நலவாரியம் பெறுவோம் என்று அனைவரும் சபதமேற்போம்!

K. சுப்ரமணியன்

மாநில தலைவர்

S. தேவராஜ்

மாநில பொதுச் செயலாளர்

லவ்லி பாலகிருஷ்ணன்

மாநில பொருளாளர்

T.V.S. செந்தில்குமார்

மாநில துணை பொதுச் செயலாளர்

மற்றும் அனைத்து மாநில நிர்வாகிகள்

தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் TTKTMS பதிவு எண் 2682/CNI

மயிலாப்பூர்

சென்னை 4

7598757825

தலைவர் M.S.பாண்டியன் TVT CHENNAI

 தமிழ் நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்றம் சங்கம்  சார்பில் 

அனைத்து கிளை சங்கம் 


நமது சங்க கொடி கம்பத்தில்  இன்று தேசிய கொடி ஏற்றிய  அனைவருக்கும் வாழ்த்துக்கள்  நன்றிகள் 

இந்திய இறையாண்மை சகோதரத்துவம் ஒற்றுமை தேச வளர்ச்சி நமது சங்க நபர்களுக்கு உள்ளது என்று இன்று உலகில் அறியும் வண்ணம் தமிழகத்தில் தையற்கலை தொழிலாளர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி உதவிகள் பல செய்தும் சுதந்திரம் பெற்று  தந்த அனைவரின்  நினைவுகளை பகிர்ந்து கொண்டது சிறப்பு  


நம்மை வழி நடத்தும் நமது நிறுவனர்  ஐயா TVS மணி ஐயா அவர்கள் புகழ் இன்று நமது மூலம் உலகம் அறிய செய்து இருப்போம் 


வாழ்க தையற்

கலை 

வாழ்க பாரதம்

வெங்கட்ராம்ஜீ

திருவெற்றியூர் கிளை

சென்னை 19














சனி, 8 ஜனவரி, 2022

திங்கள், 3 ஜனவரி, 2022

தமிழ் நாடு தையர்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் திருவொற்றியூர் கிளை

 வணக்கம் நண்பர்களே 


2022 ஆம் ஆண்டு திருவொற்றியூர் பகுதியில் உள்ள நபர்களுக்கு தையர்கலை சங்கம் மூலம் சங்கத்தின் காலோண்டர் வழங்கி சங்கம் சார்பாக கௌரவ படுத்திய போது 


என்றும் அன்புடன் 


தமிழ் நாடு தையர்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் திருவொற்றியூர் கிளை