செவ்வாய், 20 செப்டம்பர், 2022

மலரும் நினைவுகள்! 1

 லவ்லி பாலகிருஷ்ணன்

அன்பு தையற்கலைஞர்களே வணக்கம் நீண்ட நாட்களாக எனது பயணத்தின் சுவடுகளை முடிந்த வரையில் நினைவு படுத்தி தரலாம் என்று நினைத்து இன்று ஆரம்பிக்கின்றேன்.

எனக்கு தொழிலும் சங்கமும் வாழ்க்கையில் இணைந்தே நடைபெற்றதால் எனது தொழிலில் இருந்து ஆரம்பிக்கின்றேன்.

1964ல் ஹைஸ்கூல் படிக்கும் போது எனது அண்ணன் திரு சௌந்தர்ராஜன் அவர்கள் ஒரு ரெடிமேட் தயாரிப்பு மற்றும் எம்பிராய்டரி கம்பெனியில் மேலாளராக இருந்தார்.

பள்ளிக்கூடம் முடிந்ததும் மாலையிலும் இரவிலும் விடுமுறை நாட்களிலும் அங்கு எம்பிராய்டரி பிசின் கட்டிங் செய்வது தொழிலாளர்களுக்கு மெட்டீரியல் எடுத்து தருவது போன்ற வேலை செய்வேன்.

அப்போது குழந்தைகளுக்கு கவுன் பாபாசூட் தயாரிப்பு கம்பெனிகளில் டிசைன் பட்டன்கள் அதிக அளவில் கிடைக்காது எனது சகோதரர் பெங்களூர் மற்றும் பாம்பேயில் இருந்து அதிக டிசைன்களில் பட்டன்கள் வரவழைத்தார் கோட் பட்டன்களும் வரவழைத்தார். 

ரெடிமேட் தயாரிப்பாளர்களுக்கு பல டிசைன்களில் பட்டன் பார்த்ததும் மகிழ்ந்து அதிக அளவில் வாங்கினார்கள்.

மதுரையில் கோட் தைப்பவர்கள் சுதாகரன் டெய்லர்ஸ், பாப்னி டெய்லர்ஸ், வேல்முருகன் டெய்லர்ஸ், பாம்பே டெய்லர்ஸ் ஆகியோர் மட்டுமே.

கோட் பட்டன் பல மாடல்கள், கலர்களில் சப்ளை செய்ததின் மூலம் நமது தையற் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் திரு சுதாகரன் அவர்கள் அறிமுகம் கிடைத்தது நான் சங்கத்தில் சேவை செய்ய ஊன்று கோலாக அமைந்தது.

தொடர்ச்சி அடுத்து......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக