செவ்வாய், 20 செப்டம்பர், 2022

மலரும் நினைவுகள்! 2

 லவ்லி பாலகிருஷ்ணன்

 இப்படியே எனது வாழ்க்கையில் மாற்றங்கள் நடைபெற ஆரம்பித்தது. திரு சுதாகரன் அவர்கள் 1970ல் மிகவும் நன்றாக பழக ஆரம்பித்தார். அது சமயம் லேபிள் ஆர்டரும் வாங்க ஆரம்பித்து இருந்தேன். திரு சுதாகரன் அவர்கள் கோட் வைத்து தரும் அட்டை பெட்டி காண்பித்து அதில் அவருக்கு தோன்றும் குறைகளை சொல்லி அவைகளை நிவர்த்தி செய்து தயார் செய்ய முடியுமா என்று கேட்டார். நான் ஒரு அட்டைபெட்டியை வாங்கிக்கொண்டு கீழ ஆவணி மூல வீதி பேப்பர் ஸ்டோர் பஜாரில் வேண்டிய திக் அட்டைகளும் கலிகோ மார்பிள் பேப்பர் வாங்கி வந்து விடுமுறை தினத்தில் எனது சகோதரரின் ஆலோசனையுடன் புதிய முறையில் சரியான மூடி அளவிலும் வளையாத வகையிலும் தயார் செய்து மறுநாள் திரு சுதாகரன் அவர்களிடம் காண்பித்தேன். பார்த்ததும் மகிழ்ந்து நன்றி தெரிவித்து 100 பெட்டிகள் ஆர்டர் தந்தார். என்னால் தயார் செய்ய சரியான இயந்திரங்கள் இல்லை ஆகவே எனக்கு தெரிந்த பைண்டிங் கம்பெனியில் மெட்டீரியல் வாங்கி தந்து இதே முறையில் தயார் செய்து தருகிறேன். சிறுசிறு குறைகள் முதலில் வந்தாலும் நாளடைவில் இதைவிட நல்ல ஃபினிஷிங்கில் செய்து தருகிறேன் என்று கூறியவுடன் மகிழ்ந்து ஆர்டர் தந்தார்.

மேலும் நினைவுகள் தொடரும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக