செவ்வாய், 20 செப்டம்பர், 2022

மலரும் நினைவுகள்! 7

 லவ்லி பாலகிருஷ்ணன்

நான் நமது சங்கத்தின் தலைவர் திரு சுதாகரன் அவர்களை சந்தித்து விபரம் கூறினேன். விபரம் அனைத்தும் கேட்டு அவரது உதவியாளரை அழைத்து சங்கத்தின் லெட்டர் பேடு கொடுத்து தம்பி பாலகிருஷ்ணன் சொல்வது போல் டைப் செய்து வருமாறு கூறினார்.

நானும் உடன் சென்று வங்கி மேலாளர் சொன்னது போல டைப்பிங் செய்து தலைவர் அவர்களிடம் தந்ததும் கையெழுத்து போட்டு கவரில் வைத்து தருமாறு உதவியாளரிடம் தரும் சமயம் ஒரு நிர்வாகி வந்தார். கடிதத்தை படித்து பார்த்து எப்படி சங்கத்தின் லெட்டர் பேடில் தரலாம் என கேட்டார். தம்பியை எனக்கு பல ஆண்டுகளாக நன்றாக தெரியும் நான் தலைவர் நான் தருகிறேன். எனது பொறுப்பு என்று கூறி என்னிடம் கடிதம் தந்தார்.

வங்கியில் கடிதம் தந்ததும் மேலாளர் லோன் சாங்ஷன் செய்தார்.

திரு சுதாகரன் அவர்களும் திரு டீ வீ எஸ் மணி அவர்களும் என்னிடம் காட்டிய பாசம் தான் எனக்கு சங்கத்தில் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

1981 என்று நினைக்கிறேன் தமிழ்நாடு முழுவதும் சங்கங்கள் இணைத்து தலைவர் திரு சுதாகரன் அவர்கள் தலைமையில் மதுரையில் மாநில மாநாடு நடந்தது. நானும் மாநாடு நோட்டீஸ் பல கடைகளில் தந்து தகவல் சொன்னேன்.

லீனா லேபிள்ஸ் சார்பில் கல்கண்டு புத்தகம் அளவில் 16 பக்கத்தில் தையற்கலைஞர்களின் கருத்து வாழ்த்துக்களுடன் 2000 பிரதிகள் அச்சிட்டு மாநாட்டில் விநியோகம் செய்தோம்!

நினைவுகள் தொடரும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக