செவ்வாய், 20 செப்டம்பர், 2022

மலரும் நினைவுகள்! 6

 லவ்லி பாலகிருஷ்ணன்

70லிருந்து தொழிலை மும்முரமாக கவணித்தேன். 76ல் சகோதரர்கள் திரு சாகேத்தராமன் மற்றும் திரு கிரிதரன் ஆகியோரும் படிப்பை முடித்து தொழிலுக்கு வந்து விட்டனர்.

76 ல் லேபிள் தொழிலுடன் வீட்டில் 10 எம்ப்ராய்டரி மிஷினும் 3 ஜிக் ஜாக் மிஷினும் வாங்கி வெளியில் கூலி வேலை வாங்கி தொழிலாளர்கள் ஒத்துழைப்புடன் இரவு பகல் வேலை நடந்து கொண்டிருந்தது.

அப்போதெல்லாம் பழைய சிங்கர், பஃப் மிஷின் கள் தான் ஜிக் ஜாக் மிஷின்.

97ல் தான் ரெனியுவ் எனும் கம்பெனி இந்தியாவிலேயே ஜிக் ஜாக் மிஷின் தயார் செய்து வெளியிட்டது. உஷா டீலர் தான் அதன் விற்பனையாளர். நல்ல அறிமுகம் இருந்ததால் என்னை அழைத்து அவசியம் ஒரு மிஷின் வாங்க வேண்டும் என்றார்.

முதன் முதலில் மதுரையில் ரெனியுவ் ஜிக் ஜாக் மிஷின் வாங்கினோம். 

80ஆம் ஆண்டுகளில் எம்பிராய்டரி தொழில் டல் அடித்தது போட்டியும் அதிகமானது. 

நாங்கள் சகோதரர்கள் மதுரையில் லேபிள் கம்பெனி ஆரம்பிக்கலாமா என்று யோசித்தோம். பிரிண்டிங் தொழிலிலும் அனுபவம் இருந்ததால் மதுரை வீட்டில் பிரிண்டிங் பிரஸ்ஸும். மங்களக்குடி கிராமத்தில் உள்ள வீட்டில் லேபிள் கம்பெனி ஆரம்பிப்பது என்று முடிவு செய்து பணம் பற்றாக்குறைக்கு வங்கியில் சென்று விசாரித்தோம் மேனேஜர் வரிசைப்படி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும் என்றார். மதுரைக்கு புது தொழில் என்றவுடன் தொழில் சம்பந்தமான பெரிய நபரிடம் சுபாரிசு கடிதம் வாங்கி வரச் சொன்னார்.

நான் திரு சுதாகரன் அவர்களை சந்தித்து பேசிய விபரம் அடுத்த மலரும் நினைவுகளில்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக