ஞாயிறு, 2 அக்டோபர், 2022

மலரும் நினைவுகள்! 20

 லவ்லி பாலகிருஷ்ணன்.

கூட்டத்தில் அனைவருக்கும் உணவு தடையின்றி வழங்கினார்கள். அய்யா அவர்களும் அனைவர்களுடனும் உணவருந்திய பின் தங்கியுள்ள அறைக்கு எங்களை அழைத்து சென்று செலவுக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டார். அந்த பகுதி வியாபாரிகள் செல்வந்தர்களிடம் வசூல் செய்ததும் ஓரளவுக்கு செலவுக்கான பணம் வசூலாகிவிட்டது என்று தெரிவித்தார்கள். மகிழ்ந்த அய்யா அவர்கள் எங்களை மிகவும் பாராட்டினார்.

அன்றிரவு விடைபெற்றபின் எந்தெந்த பகுதிக்கு என்று செல்வது என்பதை குறித்த்துக்கொண்டு அந்தந்த தேதிகளில் நான் அவசியம் வரவேண்டும் என்று சொன்னார்கள்.

அமைப்பாளர்களுடன் குறிப்பிட்ட தேதிகளில் அனைத்து பகுதிகளுக்கும் பயணம் செய்து உறுப்பினர் படிவம் வழங்கி 30 உறுப்பினர்கள் சேர்ந்ததும் அழைக்க சொன்னோம். முதலில் அம்மாப்பேட்டை, பட்டைக்கோயில், குகை, செவ்வாய்ப்பேட்டை மற்றும் பகுதிகளில் உறுப்பினர்கள் சேர்க்க ஆரம்பித்தனர். அடுத்த நிகழ்ச்சி செவ்வாய்ப்பேட்டையில் ஏற்பாடு ஆகியது. அதன் விபரம் அடுத்த நினைவுகளில்!

மலரும் நினைவுகள்! 21

 லவ்லி பாலகிருஷ்ணன்.

சேலம் செவ்வாய் பேட்டை கிளையில் நிர்வாகிகள் தேர்வு செய்து தலைமை சங்கத்தில் 26-9-1999 அன்று நிகழ்ச்சிக்கு ஒப்புதல் பெற்று செவ்வாய் பேட்டை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மண்டபம் புக்கிங் செய்து நோட்டீஸ் பிரிண்டிங் செய்ததும் பொதுச் செயலாளர் அய்யா திரு டீ வீ எஸ் மணி அவர்களின் வருகை மிக விமரிசையாக செய்ய நினைத்த செவ்வாய் பேட்டை நிர்வாகிகள் திருவாளர்கள் எஸ். தேவராஜ், P.செல்வராஜ்,  நாராயணசாமி, A.சந்திரன், P.சண்முகம் ஆகியோருடன் நானும்  ஜாகிர் அம்மாபாளையம் போன்று மாவட்டம் முழுவதும் சுற்றி அழைப்பு தந்தோம். 

நிகழ்ச்சி முதல்நாள் சென்னையியிலிந்து அய்யா அவர்கள் பேருந்து மூலம் சேலம் பேருந்து நிலையம் வருவதற்குள் உடைகள் செவ்வாய் பேட்டை கிளை உறுப்பினர்கள் அடையாள அட்டைகள் இருந்த சூட்கேஸ் திருடப்பட்டு விட்டது.

காலையில் நிகழ்ச்சிக்கு அய்யா அவர்கள் அணிந்து கொள்ள ஆடைகள் இல்லை என்று வருந்தும் போது தையற்கலைஞர்களால் எதுவும் முடியும் எனும் சம்பவம் நடந்தது. என்னை என்பது அடுத்த நினைவுகளில்!

புதன், 28 செப்டம்பர், 2022

மலரும் நினைவுகள்! 19

 லவ்லி பாலகிருஷ்ணன்.

காலை 9-00 மணிமுதல் சிறுக சிறுக அனைத்து பகுதிகளில் இருந்தும் தையற்கலைஞர்கள் வரத்தொடங்கி விட்டனர். அய்யா அவர்களும் காலை 10-00 மணிக்கெல்லாம் மேடைக்கு வந்து விட்டார்.

ஒவ்வொரு பகுதியில் வந்தவர்கள் பெயர் குறித்து கொண்டு யார் பேசுவார் என்பதையும் கேட்டு ஒவ்வொரு பகுதியாக பேச அழைத்தேன். பேசுவதற்கு முன்பாக அனைவரிடமும் சங்கம் தேவையா இல்லையா எப்படி அமைக்கலாம் என்பதை மட்டுமே பேச சொன்னேன். அனைவரின் பேச்சையும் பெயருடன் அய்யா அவர்கள் குறிப்பெடுத்தார். 500 பேருக்கும் மேல் வந்திருந்தனர். மகளிர் 200 பேருக்கு மேல் இருக்கும்.

அனைவரும் சங்கம் அவசியம் தேவை என்றுதான் பேசினார்கள். இறுதியில் அய்யா அவர்களின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டை மிகவும் பாராட்டினார். மாவட்டத்திற்கு 6 அமைப்பாளர்களை அய்யா அவர்கள் நியமனம் செய்தார். எனக்கு பதவி முக்கியமல்ல சங்கம் அமைத்தால் மகிழ்வேன் உழைப்பை தருவேன் என் பெயரை சேர்க்க வேண்டாம் என்று முன்கூட்டிய சொல்லி விட்டேன்.  அமைப்பாளர்கள் அனைவரும் விரைவில் மாவட்ட நிர்வாகம் அமைக்கவும் சொன்னார்.

அடுத்த நிகழ்வுகள் விரைவில்!

மலரும் நினைவுகள்! 18

 லவ்லி பாலகிருஷ்ணன்.

சேலத்தில் பொன்னம்மாபேட்டையில் பெரியவர் கொடி தைக்கிறார் என்றவுடன் அவரை சந்தித்து நமது கொடி என்றவுடன் ஆர்வமாக குறைந்த விலையில் சிம்பலுடன் கொடிகள் தயாரித்து தந்தார். ஜாகிர் அம்மாபாளையம் தையற்கலைஞர்களும் 6அடிக்கு 30அடி‌ அளவில் சில கொடிகள் தைத்தனர். மதியம் 300 பேருக்கு உணவு சொல்லி தேவைப்பட்டால் மேலும் உணவு தயாரிக்கவும் ஆயுத்தமானோம்.

முதல்நாள் இரவு மண்டபத்திற்கு அருகிலும் இரும்பாலை ரோட்டில் நடுவில் சென்டர் மீடியேட்டரில் விளக்கு கம்பங்களுக்கு இடையிடையே கொடிகள் கட்டினோம். நிகழ்ச்சியை மாநாடு போன்றே ஏற்பாடு செய்து விட்டனர்.

காலையில் அய்யா டீ வீ எஸ் மணி அவர்களும் மற்றும் நிர்வாகிகளும் நாமக்கல் மாவட்ட செயலாளர் திரு சாமுவேல் அவர்களும் வந்து பார்த்து வியந்து விட்டார்கள். 

நாங்கள் கூட்டம் எப்படி சேரும் என்ற சிந்தனையிலேயே இருந்தோம்.

கூட்டம் எப்படி நடந்தது என்பது மலரும் விரைவில்!

திங்கள், 26 செப்டம்பர், 2022

மலரும் நினைவுகள்! 17

 லவ்லி பாலகிருஷ்ணன்.

முக்கியஸ்தர்கள் அனைவரும் சேர்ந்து எப்படி நிகழ்ச்சி நடத்துவது என்னென்ன செலவுகள் உள்ளது என்று கணக்கு பார்த்தோம். அதை எப்படி வசூல் செய்வது என்று பார்த்தோம். அனைத்தையும் செய்து விடலாம் என்று எனக்கு நம்பிக்கை தந்தார்கள்.

20 தினங்கள் மட்டுமே உள்ளது. 

பேசியபடி நானும் திருவாளர்கள் ஏ.வி.முத்துவேலன், ஸ்டாண்டர்ட் ராஜமாணிக்கம், கிஷோர் ராஜமாணிக்கம், லோகநாதன், தமிழ், மாது, தங்கவேல், வி.விஜயகுமார் ஆகியோரும் 3 அல்லது 4 பைக்கில் அவரவர் பைக்கிற்கு அவரவர்கள் பெட்ரோல் போட்டு காலையில் கிளம்பி இரவு வரை சேலம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் 15 தினங்கள் நோட்டீஸ் விநியோகம் செய்து சங்கத்தின் தேவை குறித்து விளக்கி அழைத்தோம். இடையிடையே இரண்டு மூன்று நபர்கள் வசூலுக்கு சென்று விடுவார்கள். நாளூம் நெருங்க நெருங்க கூட்டம் வருமா என்று சந்தேகமும் வந்தது. ஆனாலும் நம்பிக்கையுடன் செயல்பட்டோம். அய்யா டீ வீ எஸ் மணி அவர்களும் இடையிடையே தொலைபேசி மூலம் விசாரித்தது தெம்பு கொடுத்தது.

நாளும் நெருங்கியது நிகழ்வுகள் தொடரும்!

மலரும் நினைவுகள்! 16

 லவ்லி பாலகிருஷ்ணன்.

மதுரை மாநில மாநாட்டிற்கு பின்னர் 2நாளில் சேலம் சென்று ஜாகிர் அம்மாபாளையம் நிர்வாகிகளை சந்தித்தேன். ஸ்டாண்டர்ட் திரு ராஜமாணிக்கம் அவர்கள் இல்லத்தில் கூட்டம் நடைபெற்றது. இந்த வாரத்தில் 50 உறுப்பினர் சேர்க்கிறோம் என்றார்கள் சென்னையில் இருந்து உறுப்பினர் அட்டைகள் வந்ததும் அய்யா டீ வீ எஸ் மணி அவர்களிடம் தேதி வாங்கி மண்டபத்தில் மாவட்ட அளவில் கூட்டம் நடத்துவது என்றார்கள்.

5தினத்தில் 50 உறுப்பினர் சேர்த்தனர். நான் வாங்கிக்கொண்டு நேரில் சென்று பொதுச்செயலாளர் அவர்களை சந்தித்து கார்டு தயார் செய்து தேதியும் வாங்கி சேலம் திரும்பினேன். அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி.

ஜாகிர் அம்மாபாளையம் இரும்பாலை ரோடு வேலாயுத கவுண்டர் திருமண மண்டபம் புக்கிங் செய்து மாவட்ட ஆலோசனை கூட்டம் நோட்டீஸ் பிரிண்டிங் செய்து முக்கியஸ்தர்களுடன் சென்னை நேரில் சென்று அய்யா டீ வீ எஸ் மணி அவர்களுக்கு அழைப்பு தந்து சேலம் வந்ததும் நிகழ்ச்சி திட்டம் தீட்டினோம்.

திட்டம் மலரும்!

மலரும் நினைவுகள்! 15

 லவ்லி பாலகிருஷ்ணன்.

பொதுக்குழுவில் அய்யா டீ வீ எஸ் மணி அவர்கள் பேசும் போது சேலத்தில் இருந்து மூன்று கிளைகள் வந்ததற்கு நன்றி என்றும் லவ்லி பாலகிருஷ்ணன் அவர்களை பாராட்டுவதாகவும் சொல்லி சேலத்தில் கிளைகள் அமைக்க வேண்டும் என்று மனு தந்துள்ளார்கள் சேலம் மாவட்டம் அமைக்கும் பொறுப்பு லவ்லி பாலகிருஷ்ணன் வசம் தந்துள்ளேன். அவர் மூலம் உறுப்பினர் அட்டைகள்பெற்று கிளைகள் அமைத்து மாவட்ட சங்கம் அமைக்க வேண்டும் என்று கூறினார்.

அதன் பின்னர் மாலை 4-00 மணிக்கு தெப்பக்குளம் அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு மேலமாசி வீதி வடக்குமாசிவீதி ஆலாலவிநாயகர் கோயில் அருகில் அமைக்கப்பட்ட மாநாட்டு பந்தலை அடைந்தது. 

அரசியல் கட்சிகள் கூட்டத்தை விட நமது கூட்டம் அதிகமாக இருந்தது குறிப்பிடத தக்கது.

மாநாடு முடிந்ததும் இரண்டு தினத்தில் சேலம் வருவதாக சொல்லி அனுப்பி இத்தகவலை பொதுச் செயலாளர் அவர்களிடமும் தெரிவித்தேன்.

சேலத்தில் நடந்த நினைவுகள் தொடரும்!