ஞாயிறு, 2 அக்டோபர், 2022

மலரும் நினைவுகள்! 20

 லவ்லி பாலகிருஷ்ணன்.

கூட்டத்தில் அனைவருக்கும் உணவு தடையின்றி வழங்கினார்கள். அய்யா அவர்களும் அனைவர்களுடனும் உணவருந்திய பின் தங்கியுள்ள அறைக்கு எங்களை அழைத்து சென்று செலவுக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டார். அந்த பகுதி வியாபாரிகள் செல்வந்தர்களிடம் வசூல் செய்ததும் ஓரளவுக்கு செலவுக்கான பணம் வசூலாகிவிட்டது என்று தெரிவித்தார்கள். மகிழ்ந்த அய்யா அவர்கள் எங்களை மிகவும் பாராட்டினார்.

அன்றிரவு விடைபெற்றபின் எந்தெந்த பகுதிக்கு என்று செல்வது என்பதை குறித்த்துக்கொண்டு அந்தந்த தேதிகளில் நான் அவசியம் வரவேண்டும் என்று சொன்னார்கள்.

அமைப்பாளர்களுடன் குறிப்பிட்ட தேதிகளில் அனைத்து பகுதிகளுக்கும் பயணம் செய்து உறுப்பினர் படிவம் வழங்கி 30 உறுப்பினர்கள் சேர்ந்ததும் அழைக்க சொன்னோம். முதலில் அம்மாப்பேட்டை, பட்டைக்கோயில், குகை, செவ்வாய்ப்பேட்டை மற்றும் பகுதிகளில் உறுப்பினர்கள் சேர்க்க ஆரம்பித்தனர். அடுத்த நிகழ்ச்சி செவ்வாய்ப்பேட்டையில் ஏற்பாடு ஆகியது. அதன் விபரம் அடுத்த நினைவுகளில்!

மலரும் நினைவுகள்! 21

 லவ்லி பாலகிருஷ்ணன்.

சேலம் செவ்வாய் பேட்டை கிளையில் நிர்வாகிகள் தேர்வு செய்து தலைமை சங்கத்தில் 26-9-1999 அன்று நிகழ்ச்சிக்கு ஒப்புதல் பெற்று செவ்வாய் பேட்டை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மண்டபம் புக்கிங் செய்து நோட்டீஸ் பிரிண்டிங் செய்ததும் பொதுச் செயலாளர் அய்யா திரு டீ வீ எஸ் மணி அவர்களின் வருகை மிக விமரிசையாக செய்ய நினைத்த செவ்வாய் பேட்டை நிர்வாகிகள் திருவாளர்கள் எஸ். தேவராஜ், P.செல்வராஜ்,  நாராயணசாமி, A.சந்திரன், P.சண்முகம் ஆகியோருடன் நானும்  ஜாகிர் அம்மாபாளையம் போன்று மாவட்டம் முழுவதும் சுற்றி அழைப்பு தந்தோம். 

நிகழ்ச்சி முதல்நாள் சென்னையியிலிந்து அய்யா அவர்கள் பேருந்து மூலம் சேலம் பேருந்து நிலையம் வருவதற்குள் உடைகள் செவ்வாய் பேட்டை கிளை உறுப்பினர்கள் அடையாள அட்டைகள் இருந்த சூட்கேஸ் திருடப்பட்டு விட்டது.

காலையில் நிகழ்ச்சிக்கு அய்யா அவர்கள் அணிந்து கொள்ள ஆடைகள் இல்லை என்று வருந்தும் போது தையற்கலைஞர்களால் எதுவும் முடியும் எனும் சம்பவம் நடந்தது. என்னை என்பது அடுத்த நினைவுகளில்!